தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலம் ஆனவர் நடிகை பிரியங்கா நல்காரி.
சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் இருந்த ரோஜா தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகையானார்.இன்ஸ்ட்டாவில் இவருக்கு என்று ரசிகர் பட்டாளமே உள்ளது.
தெலுங்கிலும் சீரியல்கள் நடிக்கும் இவர் தற்போது ஜீ தமிழில் நள தமயந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என கூறபடுகிறது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.
இதற்கு முன் ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் கமிட்டாகி நடித்து வந்தவர் சில காரணங்களால் தொடரில் இருந்து வெளியேறியிருந்தார். இந்த நிலையில் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தனது கணவருடன் இணைந்து புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றை ஆரம்பித்துள்ளார், அதற்கு அண்மையில் பூஜையும் போட்டுள்ளார். சீரியலில் இருந்து விலகிவிட்டு முழுக்க முழுக்க ஹோட்டல் பிசினஸில் ஈடுபட போகிறார் என கூறப்படுகிறது.
லாரியின் டயர் வெடித்து விபத்து | Thedipaar News
