2022 – 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மின்சாரக் கட்டணங்கள் தாமதமாக செலுத்தப்பட்டதன் காரணமாக கிட்டத்தட்ட 30 மில்லியன் சிவப்பு பில்கள் வழங்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் 1.3 மில்லியன் பாவனையாளர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
126,000 இற்கும் அதிகமான கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கிட்டத்தட்ட 1.9 மில்லியன் புதிய மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது 7.2 மில்லியனுக்கும் அதிகமான மின்சார பாவனையாளர்கள் இருப்பதாக அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (P)
ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி | Thedipaar News