தந்தை இறப்பிற்கு கூட போகாமல், படத்தில் பிசியாக இருந்த கோவை சரளா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை கோவை சரளா காமெடி நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். அவர் தற்போது அம்மா ரோல்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோயினுக்கு உண்டான வரவேற்பு இவருக்கும் உண்டு. இப்போதும் இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் ஏராளம். மனோரமாவை அடுத்து தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகை என்றால் அது கோவை சரளா தான். கோவை சரளா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி அவர் பேசி இருக்கிறார். கோவை சரளா ஊட்டியில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது அவரது அப்பா திடீரென இறந்துவிட்டாராம். 

கோவை சரளா நடித்து வந்த அந்த படத்தை எடுத்தது ஒரு சின்ன நிறுவனம். ஷூட்டிங்கை நிறுத்த முடியாத நிலை இருந்தது. அதனால் அப்பா இறப்புக்கு கூட செல்ல முடியவில்லை. ஆனால் நான்பணத்திற்காக தான் இப்படி செய்தேன் என மோசமாக பேசினார்கள் என கோவை சரளா கூறி இருக்கிறார். உண்மையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே அப்பா இறப்பிற்கு கூட போகாமல் படத்தில் நடித்துள்ளார்.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் விசயம் உண்மையா? | Thedipaar News

Related Posts