அமெரிக்க ஆதரவு தேவையில்லை: தனித்துப் போரிடுவோம் : இஸ்ரேல் பிரதமர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஹமாஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவின்றித் தனித்துப் போரிடத் தயார் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

ஆயுத விநியோகத்தை நிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக இஸ்ரேலியப் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இன்று நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம், நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம், எங்கள் எதிரியையும் நம்மை அழிக்க முயல்பவர்களையும் தோற்கடிக்க நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்… தேவைப்பட்டால், நாங்கள் எங்கள் விரல் நகங்களால் போராடுவோம்.

தெற்கு காஸாவில் அமைந்த ராபா நகரில் தரைவழித் தாக்குதலைத் ஆரம்பித்தால், இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை ராபா மீதான தாக்குதலுக்குப் போதுமான ஆயுதங்கள் தம்மிடம் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (P)

யாழில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மரணம் | Thedipaar News

Related Posts