கடும் வெப்பத்தால் பரிதாபமாக பறிபோன உயிர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Printஅதிகரித்த வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கடந்த 08 ஆம் திகதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பபஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் நேற்று மதியம் 1.45 மணியளவில் மதுபோதையில் இருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார். பின்னர் 3.30 மணியளவில் அவர் வெயிலில், கீழே விழுந்து இருந்ததை அவதானித்துள்ளார். அருகில் சென்று பார்த்தவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார்.

அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அவர் அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கும் மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. (P)

யாழில் 2 பெண்கள் உட்பட நால்வர் கைது! | Thedipaar News


Related Posts