போதைப் பொருள் ஒழிப்புக்கான யுக்திய நடவடிக்கையை சில பொலிஸ் அதிகாரிகள் தவறாக பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறு குற்றங்களுக்காக யுக்திய நடவடிக்கையின் கீழ் பாடசாலை சிறுவர்கள் உட்பட அப்பாவிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.
குருநாகல் மாவட்டத்தில் வீதிகளில் இருக்கும் இளைஞர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 54ன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவதால் பாரிய பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக சமன்பிரிய ஹேரத் தெரிவித்தார்.
நேற்று நாரம்மலாவில் நடந்த சண்டையில் பதினொரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு சிறுவனும் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.
நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமன்பிரிய ஹேரத் வலியுறுத்தினார்.
இதேவேளை இதேபோன்ற சம்பவங்கள் பெரும்பாலான மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும்இ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறிக்கொண்டு சட்டத்தை கையில் எடுப்பது தவறு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் டோலவத்த தெரிவித்தார். (P)
முன்னாள் தவிசாளர் தலைமையில் சட்டவிரோத காணி பிடிப்பு | Thedipaar News