பொலிஸார் தள்ளியதில் நபரொருவர் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்தார்.

கிளிநொச்சி மின்சார சபையில் பணியாற்றும் உரும்பிராயைச் சேர்ந்த செல்வநாயகம் பிரதீபன் என்ற 41 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர். 


இதன் போது குறித்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டி சென்ற  பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியதில் குறித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தார்களா என்பது தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

யாழில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது | Thedipaar News

Related Posts