அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு அரச உத்தியோகத்தர்களின் சம்பளத் திருத்தம் குறித்துத் தீர்மானிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,

2024 ஜனவரி மாதம் முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் 5,000/- ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட்டது.

தற்போது 10,000/- ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு 2,500/- ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகின்ற போது, இது போதுமானதாக இல்லை. இருந்த போதிலும் அரசினால் இயன்ற அளவில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் இனி அடுத்த வருடமே கவனத்திற் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். (P)


Related Posts