தமிழ்நாட்டில் அட்சய திருதியை தங்க நகை விற்பனை, கடந்த ஆண்டைவிட இம்முறை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.சென்னையில் உள்ள 5000 நகை கடைகள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 45,000மேற்பட்ட கடைகளில் அட்சய திருதியை காரணமாக பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
இதனால், நேற்று ஒரே நாளில் 14 ,000 கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 15,000 ரூபாய் வரை தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. இருந்தபோதிலும் மக்கள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றனர். குறிப்பாக தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் முழு லாபம் அடைய முடியும் எனவும் தங்கம் விலை தற்போது காட்டிலும் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, 2030ஆம் ஆண்டில் தங்கம் விலை ஒரு லட்ச ரூபாய் என்ற அளவைத் தொடும் என நகைக் கடை உரிமையாளர் ஜெயந்தி லால் தெரிவித்துள்ளார்.
Font size:
Print
Related Posts