20 லட்சம் செல்போன் கனெக்சன் முடக்கம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் சமீப காலமாக நிதி மோசடி மற்றும் சைபர் கிரைம் போன்ற குற்றங்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில காவல்துறையினரும் இணைந்து விசாரித்து வருகிறார்கள். அந்த விசாரணையின் போது 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்புக்கு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த செல்போன்கள் மூலம் 20 லட்சம் நம்பர்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் 28,200 செல்போன் நம்பர்களை உடனடியாக முடக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.

Related Posts