குளியாபிட்டிய இளைஞன் கொலை l காதலி கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குளியாபிட்டிய பகுதியில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்வதற்கு ஆதரவு வழங்கியமை மற்றும் குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.

வலஸ்முல்ல – இழுக்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தனத காதலியை சந்திப்பதற்காக கடந்த 22ம் திகதி வலஸ்முல்ல பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு காணாமல் போன இளைஞனின் சடலம் பல நாட்களின் பின்னர் சிலாபம் – மாதம்பை பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  (P)


Related Posts