கரட் தொண்டையில் சசிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அநுராதபுரம் – சாலியவெவ பகுதியில் கரட் தொண்டையில் சிக்குண்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.

குழந்தையின் தாய், சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசை மீது வைத்துள்ளார்.

பின்னர் மேசையிலிருந்த கரட் துண்டொன்றை குறித்த குழந்தை உட்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் கரட் துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்குண்டதை அடுத்து நொச்சியாகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (P)


Related Posts