ரொறன்ரோவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் ஒருவர் கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒஷாவாவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து டர்ஹம் பிராந்திய பொலிஸ் சேவை அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

அவர் ரொறன்ரோவைச் சேர்ந்த 35 வயதான கொன்ரோட் வெப்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவர் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகவும் கடத்தப்பட்டவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி லாபமீட்டியதாகவும் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அது குறித்து அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். 

Related Posts