LTTE இயக்கத்திற்கு தொடர்ந்தும் இந்தியாவில் தடை நீடிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ADVERTISEMENT

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் பாதகமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கருதுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஈழம் என்ற கருத்தை கைவிடவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்புக்காகவும், ஈழம் என்ற கருத்தாக்கத்திற்காகவும் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு இந்தியாவிற்குள்ளும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களிடையேயும் தனது பிரிவினைவாதக் கருத்துக்களைத் தொடர்ந்து பரப்பி, இறுதியாக ஒட்டுமொத்த இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதித்துள்ளதாக அந்த ஊடகச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (P)



Related Posts