இருக்கைக்காக தகராறு: அரசு பஸ்சில் குடுமிப்பிடி சண்டையிட்ட பெண்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கர்நாடகாவில் பீதரில் இருந்து கலபுரகி நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் பெண்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்த நிலையில் இருக்கையை பிடிப்பதில் பெண்கள் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு கைகலப்பாக மாறி இளம்பெண் ஒருவரும், வயதான பெண் ஒருவரும் குடுமியை பிடித்து சண்டையிட்டனர்.

மேலும் செருப்பாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் இளம்பெண்ணின் ஆடையை பிடித்து வயதான பெண் இழுத்ததாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர், சக பயணிகள், அவர்களை பிரித்து இழுத்து சென்று சமாதானப்படுத்தினர். 2 பெண்களும் குடுமிப்பிடி சண்டையிடுவதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Posts