உயரும் கடல் மட்டம்.. தலைநகரை இடமாற்றம் செய்யும் தாய்லாந்து?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யலாம் என நாட்டின் காலநிலை மாற்ற அலுவலக மூத்த அதிகாரி பவிச் கேசவவோங் கூறியிருக்கிறார்.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக், கடற்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிடுகிறது.

இது ஒருபுறமிருக்க, காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் அதிகரிப்பதால் தலைநகருக்கு கூடுதல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பாங்காக் நகரின் தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கடல் நீர் நகருக்குள் வருவதை தடுக்க, நெதர்லாந்தில் பயன்படுத்தப்படுவதைப் போல, தடுப்புகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பாங்காக் நகர நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. ஆனால் நாங்கள் வேறு இடத்திற்கு நகர்வதை பற்றி யோசித்து வருகிறோம். இதுதொடர்பான விவாதங்கள் யூகத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன. 

பிரச்சினை மிகவும் சிக்கலானது.தலைநகரத்தை மாற்றுவது நல்ல தேர்வு என்பது எனது தனிப்பட்ட கருத்து. தலைநகரத்தை அரசாங்க நிர்வாகப் பகுதிகள் மற்றும் வணிக பகுதிகள் என பிரிக்கலாம். பாங்காக் அரசாங்க தலைநகராக இருக்கும். வணிகத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் பவிச் கேசவவோங் கூறினார். 

Related Posts