ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் என்ன நடந்தது? அதிர்ச்சி தரும் தகவல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரான் மற்றும் அஜர்பைஜான் இடையேயான சர்வதேச எல்லைப் பகுதியில் கட்டப்பட்ட அணையின் திறப்பு விழாவுக்கு, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர், ஈரானில் உள்ள கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் இருந்து தலைநகர் தெஹ்ரானுக்கு, அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

சிறிது நேரத்தில், ஜோல்ஃபா என்ற இடத்தில் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது. மோசமான வானிலை காரணமாக மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு மீட்புப்படையினர் விரைந்தனர்.

இன்று காலை ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்த நிலையில், அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஈரான் நாட்டு ஊடகம் அறிவித்தது. ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த நிலையில் அனைவரது உடல்களும் கருகி போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில், ஈரான் அதிபர் இப்ராஹிம் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உயிரிழந்தனர்.

ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனால் துணை அதிபர் முகமது முக்பர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.

Related Posts