ரொறன்ரோவில் இப்படியொரு சோக நிலையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இறந்தவர்களின் உடல்கள் சொந்தங்களால் கைப்பற்றப்படாமல் அரசாங்கமே பாதுகாக்கும் நிலை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1998ல் 6,000 கனேடிய டொலராக இருந்த இறுதிச்சடங்கு செலவு தற்போது 8,800 கனேடிய டொலரை எட்டியுள்ளது.

ஒன்ராறியோவில் கைப்பற்றப்படாத உடல்களின் எண்ணிக்கை 2013ல் இது 242 என இருந்துள்ள நிலையில் 2023ல் 1183 என அதிகரித்துள்ளது.

ஒன்ராறியோ நிர்வாகம் தற்போது புதிய திட்டமொன்றை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் ஒரு சடலம் கைப்பற்றப்படாமல் போனால் உறவினர்களை கண்டுபிடித்து, அவர்களின் நிலை அறிந்துகொண்டு, உள்ளூர் நகரசபை நிர்வாகம் எளிய முறையில் இறுதிச்சடங்குகளை முன்னெடுக்கும்.

 மிட் டவுன் ரொறன்ரோவில்கல்லறையை திறப்பது மற்றும் மூடுவது, இறுதிச்சடங்குகள், வரி மற்றும் பிறப்பொருட்களுக்கான செலவுகள் இல்லாமல் கல்லறை ஒன்றிற்கு செலவு 34,000 டொலர் வரையில் செலவாகின்றது.

இறுதிச்சடங்குகளுக்கு மட்டும் தற்போது 2,000 முதல் 12,000 டொலர் வரையில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

உறவினர்களால் தங்கள் சொந்தங்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் கைப்பற்றப்பட்டாமலே உள்ளதுடன் இதற்கு பணம் தான் 24 சதவிகித காரணமாக உள்ளது.

Related Posts