களமிறங்கிய வடிவேலு, ஒரு எபிசோடிற்கு ஒரு கோடியா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு ஷோவின் முதல் எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. சேனல் மட்டும் தான் வேறு மற்றபடி எல்லா நடிகர் நடிகைகளும் உள்ளனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் அடுத்த வார எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வடிவேலு கெஸ்ட் ஆக வந்திருப்பது காட்டப்பட்டு இருக்கிறது. 

அதனால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.டாப் குக்கு டூப் குக்கு ஷோவில் கலந்துகொள்ள வடிவேலு வாங்கி இருக்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. ஒரு எபிசோடுக்கு வருவதற்கு மட்டும் 1 கோடி ருபாய் வடிவேலு சம்பளமாக பெறுகிறாராம். ஒரு நாளுக்கு இவ்ளோ சம்பளமா என சின்னத்திரை ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். உண்மையில் வடிவேலு வந்திருப்பது குறித்து மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து உள்ளதால் கண்டிப்பாக ஷோவிற்கு டிஆர்பி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவி பக்கமோ குக்வித் கோமாளி ஷோவிற்கான வரவேற்பு குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இணையத்திலும் வரவேற்பு சன்டிவி குக்கிங் ஷோவிற்கு தான் அதிகம்.

Related Posts