நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 17 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதேபோன்று உயா் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, பாக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் 5 மருந்துகள் போலியானவை என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளன
இது போன்ற செய்திகள் வெளியிடுவதை விட்டு அரசு நேரடியாக இவைகளை தடை செய்து மருந்துகளின் பெயரையும் வெளியிட்டால் மக்களுக்கு உதவியாக இருக்கும்