கஞ்சி வழங்கினால் பரிசோதிக்கும் P.H.I வெசாக்கில் காணவில்லை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லைஎனசெல்வராஜா கஜேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் முகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

ஆனால் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஐஸ்கிறீம் கொடுக்கலாம்.

கஞ்சி வழங்கினால் இனநல்லிணக்கம் குழம்புமென தடைகொடுக்கும் மன்றங்கள், சிங்களவர்கள் வசிக்காத வடக்கு கிழக்கில் வெசாக் கொண்டாடினால் இனநல்லிணக்கம் பாதிக்கப்படுமென தடை வழங்கவில்லை.

கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை, வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை.

வீதியோரமாக அனுமதியின்றி ஒரு சிறு வியாபாரியால் கடை போட முடியாது. ஆனால் இராணுவத்தினரால் அனுமதியின்றி ஆரிய குளத்தினுள் வெசாக் கூடுகளை கட்டமுடியும்.

தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம். சிங்களவர்களுக்கு இன்னொரு நியாயம்.

நம்புங்கள். இலங்கை ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 25 வயதுடைய தாய் | Thedipaar News

Related Posts