பிரிட்டனின் மிகப்பிரபலமான சமையல் போட்டியான மாஸ்டர் செவ்(f) 2024 போட்டியில் தமிழ் கால்நடை மருத்துவர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார்.
தனது தமிழ் பின்னணியிலிருந்து தைரியமான ஆக்கபூர்வமான சுவைகளின் சேர்க்கைகளை உருவாக்கப்பெற்ற உத்வேகத்தின் காரணமாகவே மாஸ்டர் செவ்வில் வெற்றிபெற முடிந்ததாக பிரின் பிரதாபன் கூறியுள்ளார்.
அதோடு தனது பெற்றோர்களே தனக்கு உணவு மற்றும் சுவையின் மீதான ஆர்வத்தை தூண்டினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்
பிரின் பிரதாபனின் தந்தை கோபால் ஒரு பொறியியலாளர் என்பதுடன் தாயார் டார்க்கே வங்கியில் பணி புரிகின்றார். தனது வெற்றி குறித்து கூறிய பிரின் பிரதாபன் , எனது சமையலில் தமிழ் கலாச்சாரம் முக்கிய பங்கு வகித்தது இந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி என அவர் தெரிவித்துள்ளார்.
எனது பெற்றோர் மிகச் சிறந்த சமையல் திறன் மிக்கவர்கள் எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் சுவையால் வழிநடத்தப்படும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்ததாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழ் பின்னணியை பொறுத்தவரை ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளதெனவும், சிலர் பொருட்களை சேர்க்க முடியாது சில பொருட்களை சேர்க்க முடியும் சுவைகள் சிலவேளை ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் எனது தமிழ் கலாச்சாரத்திலிருந்து பாடங்களை கற்று நான் தயாரிக்கும் பல உணவு வகைகளில் அவற்றை சேர்த்துள்ளதாக குறிப்பிட்ட பிரின் பிரதாபன் , ஐரோப்பிய உணவு வகைகளிலும் அவற்றினை சேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்
மாஸ்டர் செவ் 2024 போட்டியில் தமிழ் கால்நடை மருத்துவர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றமைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 25 வயதுடைய தாய் | Thedipaar News