கனடாவில் சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த தமிழர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் Bradford West Gwillimbury பகுதியை சேர்ந்த 20 வயதான ஜனார்த்தன் சிவரஞ்சன் என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். கடந்த ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இதுவரை நீதிமன்றத்தினால் அவரின் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. இது தொடர்பான தகவலை York பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 18 வயதுக்கு குறைந்தவர் போல் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரால் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். குறித்த நபரால் பாதிக்கபப்ட்டவர்கள் இருந்தால் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts