இலங்கை மக்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை l 6 பேர் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 06ஆக அதிகரித்துள்ளது.

மரங்கள் சரிந்து வீழ்ந்தமை மற்றும் கடும் மழை காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இந்த சீரற்ற வானிலையினால் 9688 குடும்பங்களைச் சேர்ந்த 35,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

34 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர், 4 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள அதேவேளை, 1246 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. (P)

மிகப்பிரபலமான சமையல் போட்டியில் சாதனை படைத்த தமிழன் | Thedipaar News

Related Posts