புகைப்படம் எடுக்க முயன்ற பெண்ணை கடித்த குதிரை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

லண்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை படை காவலர்களின் அணிவகுப்பு நடந்துள்ளது. அப்போது அங்கு சென்றிருந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் குதிரை முன்பு நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அந்த சுற்றுலா பயணி புகைப்படம் எடுப்பதற்காக குதிரையை தொட்டுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த குதிரை கிளர்ந்தெழுந்து அந்த பெண்ணை ஒரு கடி கடித்து தள்ளியது. இதனால் அந்தப்பெண் தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு அங்கிருந்த சிலர் உதவி செய்தனர்.

அந்த குதிரையில் அமர்ந்திருந்த வீரர் கருமமே கண்ணாயினராக அசையாமல் அமர்ந்திருந்தார். பின்னர் குதிரை படை வீரர் அந்த குதிரையை சாந்தப்படுத்தி உள்ளார். தகவல் என்னவென்றால், அந்த குதிரைகள், மற்றவர்களால் தொடப்படுவதை விரும்புவதில்லையாம். சொல்லப்போனால், குதிரைகளைத் தொடவேண்டாம் என ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகளும் அங்கே வைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் அந்த இடத்துக்கு ஏற்கனவே சென்ற சுற்றுலா பயணிகள்.

வீடியோ இணைப்பு: https://x.com/i/status/1792944976277504067

கடவுள்தான் என்னை அனுப்பி வைத்தார் - மோடி | Thedipaar News

Related Posts