இவர்களை கண்டால் கவனம்: ஒன்ராறியோ பொலிஸார் எச்சரிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஒன்றாரியோ மாகாண பொலிஸார் சில சந்தேக நபர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆயுத முனையில் விடொன்றிற்குள் புகுந்து கொள்ளையிட்டதாக குறித்த ஐந்து சந்தேக நபர்கள் மீதும் முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சந்தேக நபர்கள் பாரியளவில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது 37 பாரிய குற்றச் செயல்களுடன் இந்த நபர்கள் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 எனவே சந்தேக நபர்கள் மேலும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்பது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் அவர்களின் புகைப்படங்களை வெளியிடுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மிகப்பிரபலமான சமையல் போட்டியில் சாதனை படைத்த தமிழன் | Thedipaar News

Related Posts