Font size:
Print
கனடாவில் யூத பாடசாலையொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ரொறன்ரோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யூத பாலர் பாடசாலை ஒன்றின் மீது இவ்வாறு சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பாடசாலைக்கு பொலிஸார் கூடுதல் பாதுகாப்பினை வழங்கியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, திட்டமிட்ட அடிப்படையில் யூத சமூகத்தின் மீது வெறுப்புணர்வு தாக்குதல் நடத்தப்படுவதாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காட்டு பகுதியில் அகழ்வு பணி - ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
Related Posts