இலங்கையருக்கு நிதி சேகரித்த ஒட்டாவா நகர முதல்வர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையருக்கு ஆதரவாக நிதி சேகரிக்க நடந்த மாரத்தான் ஓட்டத்தில் ஒட்டாவா நகர முதல்வர் Mark Sutcliffe பங்கேற்றார்.

கடந்த மார்ச் மாதம் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிர் பிழைத்த தனுஷ்க விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நெடுந்தூர ஓட்டத்தில் ஒட்டாவா நகர முதல்வர் பங்கேற்றார்.

இதில் சேகரிக்கப்படும் பணத்தை, தனுஷ்க விக்கிரமசிங்கவுக்கு நகர முதல்வர் வழங்குகின்றார். தனுஷ்க விக்கிரமசிங்க நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சோகத்தை சந்தித்துள்ளார் என அவர் விபரித்துள்ளார்.

அவரது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவ நிதி சேகரிக்க முடிவு செய்ததாக Mark Sutcliffe கூறினார். நகர முதல்வருக்கு மட்டுமல்ல, நகர வாசிகள் அனைவருக்கும் நன்றியுடைவராக உள்ளதாக தனுஷ்க விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆன்லைனில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் | Thedipaar News

Related Posts