Font size:
Print
சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தை உள்ளது. இங்கு, பல்வேறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.
இந்த சந்தைக்கு வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் சுமார் 7,000 முதல் 8,000 டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக 5000 டன் காய்கறிகள் மட்டுமே கொண்டு வரப்படுகின்றன. வரத்து குறைவால் காய்கறிகளின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
தக்காளி வரத்து 1200 டன் என இருந்ததால், தக்காளி விலை மட்டும் உயராமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று 700 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதன் காரணமாக தக்காளி விலையும் திடீரென உயா்ந்துள்ளது. அந்த வகையில், கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையான தக்காளி, நேற்று கிலோவுக்க ரூ.60 விற்பனையானது.
சீரியல் நடிகை ஆலியா மானசாவின் வேதனையான மறுபக்கம்! | Thedipaar News
Related Posts