அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா நகரின் வடபகுதியில் வசித்து வந்தவர் கேரி ஹீத்னிக். கடவுளின் மந்திரிகளுக்கான ஐக்கிய சர்ச் என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றை உருவாக்கி, அதன் பாதிரியாராக தன்னை அறிவித்து கொண்டார். இதுவரை 6 பெண்களை அவர் பேசி, தன்வசப்படுத்தி, கடத்தி சென்றிருக்கிறார்.
வீட்டின் அடித்தளத்தில் உள்ள அறையில் அடைத்து வைத்திருக்கிறார். அவர்களின் கைகளை கட்டி போட்டு இருக்கிறார். பாலியல் அடிமைகளாக அவர்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்.நீர் நிறைந்த குழியில் தள்ளியும், பாலியல் துஷ்பிரயோகம் செய்தும் கேரி கொடுமை செய்ததில் சாண்டிரா லிண்ட்சே மற்றும் டட்லி என்ற 2 பெண்கள் உயிரிழந்து விட்டனர்.
சாண்டிராவை பல நாட்களாக பட்டினி போட்டு, கைகளை கட்டி போட்டிருக்கிறார். சித்ரவதைக்கு பின்னர் அவர் உயிரிழந்து விட்டார்.இந்த 6 பேரில், ஜோசபினா ரிவேரா என்பவரும் ஒருவர். இவர் கேரியிடம் இருந்து எப்படியோ தப்பி, வெளிவந்திருக்கிறார். இதன்பின்னரே, கேரியிடம் சிக்கிய மற்ற 3 பெண்களும் மீட்கப்பட்டனர்.
இதுபற்றிய வழக்கு விசாரணையில், கேரியின் வழக்கறிஞர் சக் பெருடோ கூறும்போது, அந்த பெண்களை கடத்தி, வீட்டின் அடித்தளத்தில் பலாத்காரத்தில் ஈடுபட்ட கேரி, சரியான, புதிய இனம் ஒன்றை உருவாக்குவது என்ற இலக்குடன் செயல்பட்டார் என வாதிட்டார்.அவர்கள் பாதி கருப்பு, பாதி வெள்ளையாக இருப்பார்கள்.
வெளியுலகத்தின் தாக்கம் இன்றி அவர்கள் இருப்பார்கள் என கூறினார்.எனினும், இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி கேரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கேரியின் இந்த குற்றங்கள், பீப்பிள் மேகசின் இன்வெஸ்டிகேட்ஸ் சர்வைவிங் எ சீரியல் கில்லர் என்ற பெயரில் தொடராக வெளிவரவுள்ளது.