ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: பிரதமர் கண்டனம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஃபா வான்வழித் தாக்குதலில் ஏராளமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துவருகிறது. ஆனாலும் போரை தொடரப் போவதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் தீவிர தீக்காயங்கள், எலும்பு முறிவு, குண்டடி காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து பிரதமர் கண்டனம் தெரிவித்தார். தாக்குதலை தொடர வேண்டாம் என கனடா இஸ்ரேலை வலியுறுத்தியதாக பிரதமர்  Justin Trudeau கூறினார்.

Related Posts