நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் உறுதியாகிவிட்டதா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாக வலம் வருபவர் பிரேம்ஜி. 45 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவரிடம் திருமணம் பற்றி தான் எல்லா பேட்டிகளிலும் கேள்வி கேட்டு வந்தனர். என்னதான் படங்களில் காமெடியனாக நடித்தாலும் கூட இவரது காமெடி மக்கள் மத்தியில் எடுபடவில்லை. இசையமைப்பாளராக முயன்றும் அதுவும் எடுபடவில்லை. இருப்பினும் பின்னணி பாடகராக இவர் பெயர் எடுத்துவிட்டார் என்று தான் கூறவேண்டும். ஏனெனில் இவரது குரல் பலர்க்கும் பிடித்தமானதாக உள்ளது. நடிகர், இசை அமைப்பாளர், பாடகர் என பல பின்னணி இருந்தாலும் கூட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தற்போது பிரேம்ஜிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இந்து என்ற பெண் உடன் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. பெண்ணின் பெயர் இந்து என்பது மட்டும் தெரிகிறது, மற்றபடி எந்த விவரமும் தெரியவில்லை.

Related Posts