சிம்பு நடிப்பில் கடந்த 2006 -ம் ஆண்டு வெளியான சரவணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா நாயுடு.இப்படத்தை தொடர்ந்து வீராசாமி, ஜாம்பவான்,வைத்தீஸ்வரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த குட்டி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார். தற்போது 43 வயதான மேக்னா நாயுடு தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்காமல் வங்காளம் மற்றும் மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் மேக்னா நாயுடு பதிவிட்ட கிளாமரான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் வயது ஆகஆகத்தான் நீங்க அழகா இருக்கீங்க என கமெண்ட்களில் காம்ப்ளிமெண்ட்களை வாரி வழங்கி வருகிறார்கள். இவர் தமிழில் ஹீரோயினாக நடிக்க முயன்று முடியாத காரணத்தால் கிடைத்த வாய்ப்பை விட கூடாது என கிடைக்கும் ரோல்களில் எல்லாம் நடித்து வந்தார். இறுதியாக குட்டி படத்தில் இவர் போட்ட குத்தாட்டம் தான் இவருக்கு என்று ஒரு அடையாளத்தை கொடுத்தது. தற்போது அம்மணி தெலுங்கு சினிமா பக்கம் லீடிங் நடிகையாக உள்ளாராம்.