தனியாரில் கூட இப்படி இல்லை! தமிழக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செய்த உயர்தர வசதி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் 20,322 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மீதமுள்ள 17,221 அரசு பள்ளிகளில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு கல்வி கற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts