Font size:
Print
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறுவது தொடர்பில் சந்தேகம் எழுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதி கிடைத்தவுடன் விலைகள் உயரும் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில் 4 வருடங்களாக காத்திருக்கின்றோம். விரைவில் கொண்டுவருவதாக கூறுகின்றார்கள். ஆனால் திகதி நேரத்தை கூறவில்லை. ஆனால் இதுவரை ஏற்றுமதி செய்யப்படவில்லை. நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்யும்போது, அரசாங்கம் 200% வரி விதிக்கிறது எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே மேலும் தெரிவித்துள்ளார். (P)
Related Posts