அம்பானி வீட்டு விசேஷத்தில் அட்லீ மகனது கியூட் போட்டோ!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் அட்லீ, இன்று இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆரம்பித்த இவரது பயணம் இப்போது ஹிந்தி சினிமா போய் நிற்கிறது. அம்பானி மகன் திருமணத்திற்கு செல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் என்றால் இவரது வளர்ச்சியை நீங்களே பாருங்கள்.. அதுவும் குறுகிய காலத்திலேயே சினிமாவில் உச்சம் தொட்ட இயக்குனர் என்ற புகழும் இவருக்கே உரித்தான ஒன்று. ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் அட்லீயின் ரேஞ்சு வேற லெவலுக்கு சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த இவர் அல்லு அர்ஜுன் உடன் இணையப்போகிறார் என கூறப்படுகிறது. 

 இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் கூறுகின்றனர். தமிழ், தெலுங்கு, பாலிவுட் என இவரது புகழ் மூலை முடுக்கெல்லாம் பரவி கொண்டு இருக்கிறது. இயக்குனர் அட்லீ - பிரியா தம்பதிக்கு கடந்த ஆண்டு அழகிய மகன் பிறந்தார். தங்களுடைய மகனுக்கு மீர் என பெயர் சூட்டியுள்ளனர். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பிரியா அட்லீ தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.இந்த நிலையில், அம்பானி வீட்டு திருமண விழாவில் அட்லீ - ப்ரியா தம்பதிக்கு தங்களது மகனுடன் கலந்துகொண்டுள்ளனர். திருமண விழாவை முடித்துவிட்டு திரும்பியபோது மீடியாவால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Related Posts