என்னது அசின் - சிம்பு சேர்ந்து நடிக்க போறாங்களா? என்ன படம்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கலக்கு கலக்கி கொண்டிருந்த சிம்பு சில காலம் ஆள் எங்கே போனார் என்பதே தெரியாமல் இருந்தார். காரணம் பெரிதாக படங்கள் எதுவும் இல்லை, சிம்புவும் உடல் எடை கூடி பார்க்க பழைய சிம்பு போல இல்லாமல் முற்றிலும் மாறிப்போய் இருந்தார். இருப்பினும் இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இவர் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பார் என காத்துக்கொண்டிருந்தது. செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பின் மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படமும் இதுவே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சிம்பு கைவசம் STR 48 திரைப்படமும் உள்ளது. 

இப்போது இவர் குறித்த ஒரு செய்தி வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்து பின் கைவிடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று AC. எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாகவிருந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அசின் நடிக்கவிருந்தார்.அப்படத்தின் First லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடி இதுவரை யாரும் எதிர்பார்க்காத ஜோடி. படம் வெளியாகி இருந்தால் கண்டிப்பாக சிம்புவிற்கு திருப்பு முனை படமாக அமைந்திருக்கும். ஆனால் இப்போது இந்த ஜோடி நடைமுறையில் அசாத்தியம். காரணம் அசின், குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். எஸ். ஜே சூர்யாவும் இயக்குவதை விடுத்து நடிகராக இறங்கிவிட்டார்.

Related Posts