ரேஷன் அட்டைதாரர்கள் இனி எளிதாக இதை செய்து கொள்ளலாம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் நாட்டை பொறுத்தவரை குடும்ப அட்டை இருந்தால் பல்வேறு சலுகைகள் பெறலாம். அரசு அறிவிக்கும் பொங்கல் பரிசு, நிவாரண தொகைகளை பெற முடியும்.இதுதவிர அரசின் நிதி மானியங்களையும் பெற முடியும்.மிக முக்கியமான மகளிர் உரிமை தொகை வாங்க வேண்டுமானால், அவர்கள் கண்டிப்பாக குடும்ப அட்டை வாங்கவேண்டும் . இதேபோல் திருமண உதவி தொகை திட்டம் மற்றும் கர்ப்பிணி உதவி தொகை திட்டத்தின் பலனை பெறவும் குடும்ப அட்டை மிக அத்தியாவசியமானது. கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவிக்கிறார்கள். அதேபோல் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்ய முடியாமலும் தவித்து வந்தார்கள். அவர்கள் நாளை மறுநாள் முதல் எளிதாக மாற்றங்களை செய்ய முடியும். தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி இந்த வாரம் முதல் தொடங்குகிறது.

Related Posts