கண்டுகொள்ளாத பாலிவுட், அங்க தான் நடிப்பேன் அடம்பிடிக்கும் ஜோதிகா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின் பிரேக் எடுத்துக்கொண்ட அவர் இப்போது சினிமாவில் மீண்டும் களமிறங்கி உள்ளார். அதுவும் இவரது கம்பேக் என்பது எந்த நடிகைக்கும் தமிழ் சினிமாவில் இதுவரை கிடைக்காத வரவேற்பு. தன்னுடைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி விட்டு இப்போது மீண்டும் 10 வருடம் கழித்து நடிக்க வந்துள்ளார். நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் நடிக்க வந்து women centric படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கும் ஜோதிகா ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அவர் சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்து இருந்தார். நடிகை ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், முன்பெல்லாம் தென்னிந்திய சினிமாவை வட இந்தியாவில் யாரும் பார்க்க மாட்டார்கள். மோசமாகவும் பேசுவார்கள். 

அந்த நிலை தற்போது படிப்படியாக மாறி வருகிறது. இருப்பினும் 25 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் நடித்த எனது அனுபவத்திற்கு சரியான வாய்ப்புகள் பாலிவுட்டில் தற்போது கிடைக்கவில்லை என வருத்தமாக பேசி இருக்கிறார். தமிழ் சினிமா தான் உங்களை கொண்டாடுகிறது என்றால் பாலிவுட் சினிமாவும் உங்களை கொண்டாட வேண்டுமா? போகும் இடத்தில் எல்லாம் உங்களுக்கு வாய்ப்பும் மரியாதையும் கிடைக்குமா? தமிழ் சினிமாவில் நீங்க அறியப்பட்ட முன்னணி நடிகையாக இருக்கலாம் ஆனால் பாலிவுட்டில் இனிமேல் தானே உங்களை நிரூபிக்க வேண்டும்? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்..

Related Posts