காலமான பழைய நடிகர் பாண்டியனின் குடும்ப புகைப்படம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாண்டியன். இவருடைய நடிப்பு மக்களை கவர்ந்த நிலையில், தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். பார்க்கவே பக்கத்து வீட்டு பையன் போல உள்ள இவரது எதார்த்தமான முகமும் பேச்சும் இவரை தமிழ் சினிமாவில் ஏற்றுக்கொள்ள வைத்தது. புதுமைப்பெண், ஆண்பாவம், கிழக்கு சீமையிலே, மருதாணி என இவர் நடிப்பில் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. 

நடிகர் பாண்டியன் அஜித்துடன் இணைந்து சிட்டிசன் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். வெள்ளித்திரையில் ஜொலித்து வந்த நடிகர் பாண்டியனுக்கு நாளடைவில் பட வாய்ப்புகள் குறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக நடிகர் பாண்டியன் மரணமடைந்தார். இவருடைய மரணம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், பாண்டியனின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த இவரது பழைய ரசிகர்கள் இவரை நினைவு கூர்ந்து இவரை மெச்சி வருகிறார்கள்.

Related Posts