இஸ்ரேலியர்கள் மாலத்தீவு நாட்டிற்குள் நுழைய தடை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மாலத்தீவில் இஸ்ரேலியர்கள் நுழையத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசாவில் நடக்கும் போரால் இஸ்ரேலின் மீது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாலத்தீவின் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக காட்ட வேண்டும் என மாலத்தீவு எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் அதிபர் முகமது முயிசுவுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாலத்தீவு உள்துறை மந்திரி அலி இஹுசன்,"இஸ்ரேலிய பாஸ்போர்ட் பயன்படுத்தி மாலத்தீவுக்கு வருபவர்களைத் தடுக்க விரைவில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது" என்று அறிவித்தார்.

28 மில்லியன் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது | Thedipaar News

Related Posts