நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தபின், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.
இதில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆளும் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே இருந்தன. கருத்துக் கணிப்பு நடத்திய பெரும்பாலான நிறுவனங்கள் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்தன.
இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், பா.ஜ.க. கூட்டணி 361 முதல் 401 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக இந்தியா டுடே தொலைக்காட்சியில் நேரலை விவாதம் நடைபெற்றது. இதில், கருத்துக் கணிப்பு நடத்திய ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் குப்தா கலந்து கொண்டார்.
கருத்துக் கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வெளியாகியிருப்பது குறித்து பிரதீப் குப்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு தொடர்ந்து பதில் அளித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் தனது நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு தவறாகிவிட்டதை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1797939063611416857
யானை தாக்கி ஒருவர் மரணம் ; கிண்ணியாவில் ஒரு வாரத்தில் மூவர்! | Thedipaar News