சுரங்கத்தில் பதுங்கியிருந்த 5 இஸ்ரேல் வீரர்கள் என்ன ஆனார்கள்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரபா நகரின் அருகே இஸ்ரேல் படைகளால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை நுழைவாயிலை தகர்த்ததாகவும், இந்த தாக்குதலில் சுரங்கப்பாதையில் பதுங்கியிருந்த 5 இஸ்ரேலிய வீரர்களை கொன்றதாகவும் ஹமாஸ் அமைப்பின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு கூறி உள்ளது.

இந்த சுரங்கப்பாதையின் நுழைவாயில் காசா முனையின் தெற்கு பகுதியில் ரபா நகரின் மேற்கில் உள்ள தால் ஜுரோப் அருகில் இருந்ததாக அல்-கஸ்ஸாம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக, இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இதேபோல், ரபா நகரில் இயங்கும் இஸ்ரேல் ராணுவ அலுவலகத்தை தாக்கியதாகவும் அல்-கஸ்ஸாம் கூறியிருக்கிறது.முன்னதாக, ரபாவின் கிழக்கே காசா-இஸ்ரேல் எல்லை வேலியை தாண்டி செல்ல முயன்ற 3 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

44,430 வாகனங்கள் சந்தைக்கு! | Thedipaar News

Related Posts