ரயில் பணிப் பகிஷ்கரிப்பு இன்று l ரயில் சேவை இடம்பெறாது என அறிவிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சங்கங்களில் ஒன்றான லோகோமோட்டிவ் ஒபரேடிங் பொறியியலாளர் சங்கம் பணிப் பகிஷ்கரிப்பை இன்று (07) முதல் ஆரம்பித்துள்ளது.

ரயில் இயந்திர சாரதிகளின் இரண்டாம் நிலை பதவி உயர்வு, சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று (07) எந்தவொரு ரயிலும் பயணிக்காது என  லோகோமோட்டிவ் ஒபரேடிங் பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் S.R.C.M.சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.  (P)

விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் நடன வீடியோ வைரல் | Sunita Williams | Thedipaar News

Related Posts