துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்றையதினம் (07) நாட்டின் சில பகுதிகளில் தென்பட்டுள்ளது.

அதற்கமைய, இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1445 துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான (பிறை 10) எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி, ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (07) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பிறைக்குழு ஆகியன இணைந்து இவ்வறிவிப்பை ஏகமனதாக வெளியிட்டுள்ளது.

இதேவேளை  துல் ஹிஜ்ஜா மாதத்துக்கான தலைப்பிறை நேற்று 6ஆம் திகதி சவூதியில் தென்பட்டுள்ளதால் துல் ஹிஜ்ஜாவை இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து ஆரம்பிப்பதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts