சத்யராஜ் திருமணநாள், ஊரையே அழைத்து விழா! அரிதான புகைப்படம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின் ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் சத்யராஜ். ஒரு நடிகர் வில்லனாக பெயர் பெற்று விட்டார் பாராட்டும் பெற்றுவிட்டார். இருந்தாலும் கூட அந்த இமேஜை மாற்றி ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் தான் சத்யராஜ். எல்லோராலும் இப்படி முடியுமா என்றால் முடியாது. ஹீரோவாக ஆரம்பத்தில் மக்கள் மனதில் நின்றுவிட்டால் இறுதிவரை அவர் ஹீரோ தான். ஆரம்பத்தில் வில்லன் என்றால் இறுதிவரை வில்லன். இந்த கோட்பாட்டை உடைத்து இப்போதும் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர்களுள் ஒருவர் சத்யராஜ் மற்றொருவர் சரத்குமார். சரத்குமாரும் கூட சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நிலைத்து நின்றவர். குறிப்பாக சத்யராஜ் வில்லன் டு ஹீரோவாக மாற அவரது சினிமா பயணத்திற்கு வால்டர் வெற்றிவேல், மிஸ்டர் பாரத், மக்கள் என் பக்கம், நண்பன், அமைதிப்படை, ரிக்ஷா மாமா, பாகுபலி, கனா, பெரியார் என அவரது நடிப்பில் மக்களை வியக்க படங்கள் அமைந்தன. இப்போது சத்யராஜ் அவர்கள் நிறைய குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

 நாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், தயாரிப்பாளர் என சினிமாவில் ஆள்ரவுண்டராக வலம் வந்த சத்யராஜின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது. அதாவது நடிகர் சத்யராஜ் தனது மனைவி மகேஸ்வரியுடன் திருமண நாளை கொண்டாடியபோது எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படம் தான் அது. இவரது மகன் சிபிராஜ் சினிமாவில் நடித்துள்ளதால் இவர் பிரபலம், மகள் மருத்துவர் என்பதால் அவரும் பிரபலம்,முக்கியமாக பொதுநலன்களில் கவனம் செலுத்தி வரும் சத்யராஜ் மகள் பாராட்டுக்குரியவர். இப்படி குடும்பத்தில் எல்லோரும் பிரபலம் மற்றும் எல்லோராலும் அறியப்பட்டவர்கள். சத்யராஜின் மனைவி புகைப்படம் மட்டுமே யாரும் பார்த்திராத ஒன்றாக இருந்தது. அவரது புகைப்படமும் இப்போது வைரலாகி வருகிறது.

Related Posts