நடிகர் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காமெடியனாக நடித்து பிரபலமான நடிகர் சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். சில நடிகர்கள் காமெடி கதாபாத்திரத்தில் இருந்து ஹீரோவாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சந்தானம் விஷயத்தில் இது மாறாக உள்ளது. இவர் ஹீரோவாக நடித்தாலும் சரி காமெடியாக நடித்தாலும் சரி ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவரது இயல்பான நடிப்பே! கடந்த பிப்ரவரி மாதம் இவர் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். தற்போது இங்க நான் தான் கிங்கு என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் சந்தானம் , உஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சந்தானம் தனது மகன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts