சம்பளத்தில் பாதி கொடுத்து உதவும் காமெடி நடிகருக்கு இப்படி ஒரு பலவீனம் இருக்கா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் என்று சொன்னதும் முதலில் நியாபகம் வருவது கவுண்டமணி-செந்தில் தான். இப்போதும் இவர்களுக்கு நிகராக யாரும் வரவில்லை. ஏனெனில் காமெடிகள் எல்லாமே எதார்த்தமாக இருக்கும். கண்டிப்பாக அதிகமாக தவறான காமெடிகள் இருக்காது. தைரியமாக குடும்பத்துடன் பார்க்கலாம். இப்போது வரும் காமெடிகள் எல்லாமே தனியாக தான் பார்க்கமுடியுமே தவிர குடும்பத்துடன் பார்க்க முடியாது. கவுண்டமணி தனியாக காமெடி செய்தாலோ செந்தில் தனியாக காமெடி செய்தாலோ அந்த அளவிற்கு அது மக்கள் மத்தியில் எடுபடாது. இருவரும் சேர்ந்து காமெடி செய்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும். கவுண்டமணி செந்திலை அடுத்து நிறைய பிரபல காமெடி நடிகர்கள் பெயர் இடம்பெற்றாலும் எப்போதும் இவர்கள் தான் டாப். கவுண்டமணி அவ்வளவாக இப்போதெல்லாம் படங்கள் நடிப்பது இல்லை, ஆனால் அவ்வப்போது செந்தில் நடித்து வருகிறார். 

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் செந்தில் மனைவி பேசும்போது, எனது கணவர் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அவர் பணம் விஷயத்தில் கொஞ்சம் வீக்தான்.சொல்லப்போனால் அவருக்கு பணத்தை கூட எண்ணத் தெரியாது, அனைத்தையும் நான் தான் கவனிப்பேன். அதனால் திருமணம் முடிந்ததும் அவரது அப்பா என்னிடம், அவன் பண விஷயத்தில் வீக், அதனால் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால் மட்டும் சம்பளத்தில் பாதியை வைத்துக்கொண்டு மீதியை என்னிடம் கொடுப்பார் என பேசியுள்ளார்.

Related Posts