காதலரை ஊருக்கு அறிமுகம் செய்த அம்மு அபிராமி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை அபிராமி குழந்தை நட்சத்திரமாக ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தொடர்ந்து பல படஙகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அபிராமி குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த நிகழ்ச்சி மூலமாக அபிராமிக்கு காதலும் கிடைத்து இருக்கிறது. ஆம் இந்த ஷோ பலருக்கு எதிர்காலத்தை கொடுத்துள்ளது. இந்த ஷோவிற்கு முன்னர் பின்னர் என ஒருவரது வாழ்வை இரு பிரிவாக பிரிக்கலாம். இந்த ஷோவில் வெற்றி பெறுகிறார் இல்லை என்பதெல்லாம் விஷயம் கிடையாது, இந்த ஷோவில் கலந்து கொண்டாலே போதும். 

சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்று விடலாம். குக் வித் கோமாளி ஷோவை இயக்கிய பார்திவ் மணி என்பவரை தான் அபிராமி காதலிக்கிறாராம். அவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கும் அபிராமி வாழ்வில் வந்ததற்கு நன்றி என குறிப்பிட்டு இருக்கிறார்.அதனால் அவர் காதலை உறுதி செய்திருப்பதாக நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Related Posts