நடிகர் பிரேம்ஜி திருமணம் செய்துள்ள அந்த பெண் யார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் பிரேம்ஜிக்கு இன்று திருத்தணி முருகன் கோவிலில் இந்து என்ற பெண் உடன் திருமணம் நடைபெற்றது. இது சிம்பிளாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் திருமணம் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறி இருந்தார். திருமணம் நடந்து முடிந்து இருக்கும் சூழலில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன. இன்று இணையம் முழுக்க இவர்களது திருமணம் பற்றிய செய்தி தான். யார் இந்த பெண்? என்ன செய்கிறார்? மீடியாவா? என பல கேள்விகள் இணையத்தில் உலா வருகிறது. 

அவை அனைத்திற்கும் பதில் இந்த பதிவில், பிரேம்ஜிக்கு மனைவியாகி இருக்கும் இந்து பற்றிய முழு விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகாமல் தான் இருக்கிறது. இது காதல் திருமணம் அல்ல, பெற்றோர் பேசி ஏற்பாடு செய்த திருமணம் தான் என திருமணத்தில் பங்கேற்ற பாடகர் ஸ்ரீராம் கூறி இருக்கிறார். பிரேம்ஜியின் மனைவி இந்து சேலத்தை சேர்ந்தவர் என்றும், வங்கி துறையில் பணியாற்றுகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Posts